Nizhaliyae

நிழலியே நீ காட்டும் காட்டும்
காட்சி உண்மையா உண்மையா
நிழலியே நீ தீட்டும் தீட்டும்
வண்ணம் உண்மையா
ஏய் பதில் சொல்லுவாயா

சின்னஞ்சிறு துளை வழியே
அழகினை பருகுகிறாய்
திரைவிட்டு விழிவழியே
அவளை நீ திருடுகிறாய்

நிழலியே நீ காட்டும் காட்டும்
காட்சி உண்மையா உண்மையா
நிழலியே நீ தீட்டும் தீட்டும்
வண்ணம் உண்மையா

உன் குவிமுனையில் உலகம் காணா
அழகின் வானா எதிரில் தானா
சொல்லு சொல்லு நீ

தரையின் மேலே இவளை போல்
கனவும் உண்டா சொல்லு
உன்னை விட மாட்டேன்
விண்ணில் மண்ணில் நீயும் நானும்
காணா ஒற்றை மின்னல்
அவள் அவள் புன்னகையில் கண்டோம்

பூவோடும் தீயோடும் கொள்ளா வர்ண போதை
அவள் அவள் நிறத்தினில் கொண்டோம்
மின்கம்பத்தில் பூகம்பத்தில் இல்லா அதிர்வெல்லாம்
அவள் நம்மை நெருங்கிடக் கண்டோம்

முக்கோடி முத்தங்கள் உள்ளங்கையின் உள்ளே
அவள் கையைக் குலுக்கிட கண்டோம்

அதனால்லென்ன பிழை இல்லை
பதில் சொல் என் மூன்றாம் கண்ணே
எதிரே அவள் நம் பூமியில்
உதிப்பாளா நம் தாமியில்

சின்னஞ்சிறு துளை வழியே
அழகினை பருகுகிறாய்
திரைவிட்டு விழிவழியே
அவளை நீ திருடுகிறாய்

சின்னஞ்சிறு துளை வழியே
அழகினை பருகுகிறாய்
திரைவிட்டு விழிவழியே
அவளை நீ திருடுகிறாய்



Credits
Writer(s): Hesham Abdul Wahab
Lyrics powered by www.musixmatch.com

Link