Enna Idhu Enna Idhu

சிரிக்கின்றேன்
சிரிக்கின்றேன்
இதயம் இல்லாமலே நான் வாழ்கிறேன்
இதயம் எங்கே? இதயம் எங்கே? எங்கே?

I have fallen in love
I have fallen in love

என்ன இது என்ன இது
என் மனது என்னை விட்டு
தூரம் நின்று பார்க்கிறதே
என்ன இது என்ன இது
என் விழிகள் என்னை விட்டு
உன் வழியில் கிடக்கிறதே

தென்றலிலே ஈரபதம் குறைகிறதே
தென்றல் இங்கே தீ பிடித்து எரிகிறதே

I have fallen in love
I have fallen in love

என்ன இது என்ன இது
என் மனது என்னை விட்டு
தூரம் நின்று பார்க்கிறதே
என்ன இது என்ன இது
என் விழிகள் என்னை விட்டு
உன் வழியில் கிடக்கிறதே

மின்னல் சுடர் விழுந்து மேகம் தீ பிடிக்க
நின்றேன் நின்றேன் காதல் கொண்டு
உந்தன் அழகை கண்டு உருகும் பனி மலையை
கண்டேன் கண்டேன் நான் இங்கு

ஒரே ஒரு பொறி போதும்
பற்றிக்கொள்ளும் ஒரு காடு

போதும் உந்தன் கால் சுவடு
வாழும் அதில் எந்தன் மனது

காதலர் நடந்திடும் சாலைகள் யாவையும்
சொர்க்கத்தை நோக்கியே செல்லும்

I have fallen in love
I have fallen in love

என்ன இது என்ன இது
என் மனது என்னை விட்டு
தூரம் நின்று பார்க்கிறதே
என்ன இது என்ன இது
என் விழிகள் என்னை விட்டு
உன் வழியில் கிடக்கிறதே

கன்னம் வருடி விடும்
காற்றின் இனிய சுகம்
இன்பம் இன்பம் உன்னைப் போலே
பூவின் அசைவுகளும்
நதியின் வளைவுகளும்
இன்பம் இன்பம் உன்னைப் போலே

போதும் போதும் இந்த ஸ்பரிசம்
போதும் போதும் இந்த நிமிஷம்

தேவை இல்லை இந்த உலகம்
தேடு தேடு வேறு கிரகம்
உலக அதிசயம் எதுவும் இல்லையே
அன்பே நம் காதலின் முன்னே

I have fallen in love
I have fallen in love

என்ன இது என்ன இது
என் மனது என்னை விட்டு
தூரம் நின்று பார்க்கிறதே
என்ன இது என்ன இது
என் விழிகள் என்னை விட்டு
உன் வழியில் கிடக்கிறதே

தென்றலிலே ஈரபதம் குறைகிறதே
தென்றல் இங்கே தீ பிடித்து எரிகிறதே

I have fallen in love
I have fallen in love



Credits
Writer(s): Pyar Ki Baatein, Bharathi Palani
Lyrics powered by www.musixmatch.com

Link