Maname Manamae

மனமே மனமே
தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே
பெண்ணை பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கி விடு
என்னை நினைவின்றி தூங்கவிடு

மனமே மனமே
தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே

காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம்
போட்டு கொண்டால் போதையை கொடுக்கும்
போக போக தூக்கத்தை கெடுக்கும்
காதல் என்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்
கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம் போல வளருது அழகு பெண்ணின் நினைப்பு
வெட்டி எரிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே
உயிர் வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கி விடு
என்னை நினைவின்றி தூங்கவிடு

காதல் தந்த நினைவுகளை
கழற்றி எரிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலை மூட மூடிகள் உண்டு
அலை கடல் மூடிட மூடிகள் இல்லை
காதலின் கையில் பூக்களும் உண்டு
காதலின் கையில் கத்தியும் உண்டு
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதே என் வேதனை
மனமே நீ தூங்கி விடு
என்னை நினைவின்றி தூங்கவிடு

மனமே மனமே
தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே

பெண்ணை பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கி விடு
என்னை நினைவின்றி தூங்கவிடு



Credits
Writer(s): Vairamuthu, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link