Unnai Partha

உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை
போதும், போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை

ஒரு தென்றல் போல வந்து அன்பே என்னை வேர்க்க வைத்தாய்
வள்ளல் போல வாழ்வே உன்னை கெஞ்சி கேட்க வைத்தாய்
உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன்
உன்னை இன்று நான் தேடி என்னை தொலைத்தேன்

உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை
போதும், போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை

அன்பே உன் கூந்தலில் நான் கலைந்தேன்
நீ வைத்த பூக்களில் நான் உதிர்ந்தேன்
குழி விழும் கண்ணத்துக்குள் நான் விழுந்தேனே
சிறு நெற்றி வேர்வையில் நான் கரைந்தேனே

நேற்று வரை, நேற்று வரை வாழ்வில் ருசி இல்லை
மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால் மரணம் இல்லை

உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை
போதும், போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை

நான் பார்க்கும் வானவில் வளையல்களில்
நான் கேட்கும் மெல்லிசை கொலுசுகளில்
சில்லென்ற நட்சத்திரம் உன் கண்கள்தானோ
ஓ பூமத்திய ரேகை உந்தன் கைகளில்தானோ

என்ன நிறம் என்ன குணம் காதல் புரியவில்லை
காதல் கவிதை எதுவும் இன்று தெரியவில்லை

உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை
போதும், போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை

ஒரு தென்றல் போல வந்து அன்பே என்னை வேர்க்க வைத்தாய்
வள்ளல் போல வாழ்வே உன்னை கெஞ்சி கேட்க வைத்தாய்
உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன்
உன்னை இன்று நான் தேடி என்னை தொலைத்தேன்

உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை
போதும், போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை

Credits
Writer(s): Ramasamy Thevar Vairamuthu, Ramani Bharadwaj
Lyrics powered by www.musixmatch.com

Link