Vaa Vaa En Devadhai

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

வான் மிதக்கும் கண்களுக்கு
மயில் இறகால் மையிடவா
மார் உதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வான் மிதக்கும் கண்களுக்கு
மயில் இறகால் மையிடவா
மார் உதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா



Credits
Writer(s): Vairamuthu, Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link