Azhagiya Azhagiya Kili

அழகிய அழகிய கிளி ஒன்றை
பிடி பிடி பிடித்தது பூனை
பனி விழும் பனி விழும் மலர்
ஒன்றை பறி பறித்தது யானை

ஐயோ ஐயோ
அநியாயம் அய்யய்யோ
உயிர் போல் வளர்த்தேன்
உன் உறவு பொய் அய்யய்யோ

நூலானது இழையும் இழையும்
தறி தானடி வலிகள் அறியும்
அது போன்றது எனது நிலையும்
ஆசை கண்ணே

நச்சுதனி காலி ராத்
ஹே அது நகு பறி பர்ஸாது
ஹே தெறி ஜின்கடி ஹாத்
ஹே அச்சு கையா சமஜூ
ஹே

அழகிய அழகிய கிளி ஒன்றை
பிடி பிடி பிடித்தது பூனை
பனி விழும் பனி விழும் மலர்
ஒன்றை பறி பறித்தது யானை ஒ

உயிரின் பிரிவு முழுசாய் மரணம்
உறவின் பிரிவு பாதி மரணம்
விதியின் பிடியில் நானே சேரணம்
ஞானம் பழக இதுவே தருணம்

என் வாசனை வாசனை வாதையோ
இன்று வானர சேனையிடம்
அட காடுகள் கூடுகள் ஆகுமோ
என் பைங்கிளி சேருமிடம்

என் கண்ணாடி கை
மாறி கல் சேருமோ
நூலானது இழையும் இழையும்
தறி தானடி வலிகள் அறியும்
அது போன்றது எனது நிலையும்
ஆசை கண்ணே

நச்சுதனி காலி ராத்
ஹே அது நகு பறி பர்ஸாது
ஹே தெறி ஜின்கடி ஹாத்
ஹே அச்சு கையா சமஜூ
ஹே

தாய் தான் அழுதால் குடமே நனையும்
தந்தை அழுதால் வீடே நனையும்
ஊமை வழியில உள்ளம் எரியும்
பெண்ணை பெற்றால் உமக்கும் புரியும்

நான் ஆசையில் சேமித்த புதையலை
ஒரு அந்நியன் திருடுவதோ ஆ
எந்தன் நெஞ்சினில் ஆடிய நிலவினை
இன்று கிரகணம் தீண்டுவதோ

இனி என் வாழ்வும்
பெண் வாழ்வும் என்னாகுமோ
மகள் என்பது முதலில் இனிமை
மகள் என்பது பிரிவில் கொடுமை
முடிவென்பது முதுமை தனிமை
போய் வா பெண்ணே

நச்சுதனி காலி ராத்
ஹே அது நகு பறி பர்ஸாது
ஹே தெறி ஜின்கடி ஹாத்
ஹே அச்சு கையா சமஜூ
ஹே



Credits
Writer(s): Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link