Siru Punnagai

சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

உறவு தொடங்குவதும் உயிர்கள் பழகுவதும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை இரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக் கேட்க கேட்க புதுமையே
அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை
புதிய உறவுகளில் நிறைத்திடு
அறிவு வெளியுலகில் அடையும் அவஸ்தைகளை
பொழியும் நிலவொளியில் பொசுக்கிடு
இன்பம் யாவும் காட்டும் மனத்திரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும் நீயும் நானும் ஒருவனே
நம்மை பேச்சையாக்கும் தோழன் யாரு இறைவனே
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி



Credits
Writer(s): Premkumar Paramasivam, M C Murali Raj, M C Sabesan
Lyrics powered by www.musixmatch.com

Link