Devan Thedum

தேவன் தேடும் மனிதன்
தேசத்தில் இல்லையா
தேசம் அழிகின்றதே

திறப்பிலே நின்றிட
சுவரை அடைத்திட
பரிந்து பேசி ஜெபித்திட
ஆட்களே இல்லையா

ஐம்பது நீதிமான்கள் வேண்டாம்
நாற்பது நீதிமான்கள் வேண்டாம்
முப்பது நீதிமான்கள் வேண்டாம்
இருபது நீதிமான்கள் வேண்டாம்
பத்து நீதிமான்கள் இருந்தால் - தேசத்தை
அழிக்க மாட்டேன் என்று சொன்னார்

ஜீவ புஸ்தகத்தில் இருந்து
என் பேரை கிறுக்கிப் போடும்
இல்லையென்றால் இந்த ஜனத்தை
அழிக்காமல் மன்னித்தருளும்
என்று ஜெபித்து அழிவை தடுக்க
ஆட்களே இல்லையா

இந்தியாவை எனக்குத் தாரும்
இல்லையென்றால் ஜீவன் வேண்டாம்
என் தேசத்தை அழிக்காதிரும்
கோபம் நீங்கி மனம் மாறிடும்
என்று கதறி பரிந்து பேச
ஆட்களே இல்லையா



Credits
Writer(s): A Wesley Maxwell, Alwyn D Souza
Lyrics powered by www.musixmatch.com

Link