Engal Pithave

எங்கள் பிதாவே
இயேசு இரட்சகரே
தூய ஆவியானவரே
உம்மைத் தொழுகிறோம்

சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே
சாவாமையுள்ளவர் நீர்தானே
ஆதியும் அந்தமும் நீர்தானே
ஆராதனைக்குரியவர் நீர்தானே

அதிசயமானவர் நீர்தானே
ஆலோசனைக் கர்த்தர் நீர்தானே
மகிமையின் ராஜா நீர் தானே
மாறாத நேசர் நீர்தானே

சர்வ வல்ல தேவன் நீர்தானே
சாத்தானை வென்றவர் நீர்தானே
சேனைகளின் கர்த்தர் நீர்தானே
திரியேக தேவனும் நீர்தானே

எங்களுக்காய் மரித்தவர் நீர்தானே
மரணத்தை வென்றவர் நீர்தானே
மூன்றாம் நாள் எழுந்தவர் நீர்தானே
ஜீவிக்கின்ற தெய்வமும் நீர்தானே



Credits
Writer(s): A Wesley Maxwell, Alwyn D Souza
Lyrics powered by www.musixmatch.com

Link