Nirpanthamana Manithan

நிர்ப்பந்தமான மனிதன் நான்
இயேசுவே எனக்கு இரங்கிடுமே

நான் செய்ய விரும்பாததை செய்கின்றேன்
நான் பேசக் கூடாததை பேசுகின்றேன்
நான் நினைக்கக் கூடாததை நினைக்கின்றேன்
என்னை விடுவித்துக் காத்தருளும் என் இயேசுவே

பரிசுத்தமாய் வாழ வாஞ்சிக்கிறேன்
ஜெய வாழ்வு இன்னும் என்னில் இல்லையே
உம் அக்கினி அபிஷேகம் என்னில் ஊற்றிடும்
பரிசுத்தமாய் நானும் வாழ்ந்திடுவேன்

என் சத்ருக்களை சிநேகிக்க முடியவில்லை
என் ஜென்ம குணம் இன்னும் மாறவில்லை
உம் அன்பை என்னுள்ளில் ஊற்றிவிடும்
உமக்காய் சாட்சியாய் என்றும் வாழுவேன்

என் பெலவீன நேரத்தில் சோர்ந்து போனேன்
மற்றவர் வாய்ச் சொல்லால் மனம் உடைந்தேன்
என் இயேசுவே நீர் சீக்கிரம் வாரும்
உம்மோடு வாழவே வாஞ்சிக்கிறேன்

பாவி என்று என்னை ஒதுக்கினார்கள்
இப்பாவ உலகத்தில் அலைந்திருந்தேன்
உம் அனாதி சினேகத்தால் இழுத்துக் கொண்டீர்
உம் பிள்ளையாய் எனை மாற்றி வாழ்வளித்தீர்

நான் சோர்ந்து தளர்ந்திட்ட வேளைகளில்
தேற்றுவாரின்றி நான் கலங்குகையில்
உம் மெல்லிய சத்தத்தால் என்னைத் தேற்றினீர்
உம் சேவையில் நிலைத்திட உதவி செய்தீர்



Credits
Writer(s): M Alwyn, A Wesley Maxwell
Lyrics powered by www.musixmatch.com

Link