Mazhai Kaalam Megam Ondru

மழைகால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது
மழைகால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது
இத்தனை காலம் சித்திர பெண்ணை பார்வை தேடியது
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது
லல-லாலா-லால-லா-லலலா-லலலா-லல-லா

மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம்
மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம்

விரல் வழி பிறந்தது உடல் வழி கலந்தது
தலை முதல் கால் வரை சிலிர்த்திட தான்
பூவை நானும் பூவல்ல பூப்போல நீ கிள்ள
எனக்கென இருப்பது எதற்கதை மறைப்பது

மழைகால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது

ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய
ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய

கொதித்தது குளிர்ந்தது குளிர்ந்தது வளர்ந்தது
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்
காமன் பாடும் சங்கீதம் காலத்தின் சந்தோஷம்
தொட தொட தொடர்ந்தது கொடியென படர்ந்தது

மழைகால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது
இத்தனை காலம் சித்திர பெண்ணை பார்வை தேடியது
ஹான்-ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது



Credits
Writer(s): Vaali, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link