Vazhve Maayam Intha Vazhve

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
யாரோடு யார் வந்தது நாம் போகும் போது
யாரோடு யார் செல்வது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரை கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்

தாயாலே வந்தது தீயாலே வெந்தது
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டால தான்
ஊர் போவது நாலால தான்

கருவோடு வந்தது தெருவோடு போவது
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரம்மம்மா



Credits
Writer(s): Vaali, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link