Kannirandu

கண்ணிரண்டு போதாது கற்பகமே
என் நெஞ்சில் வந்து நின்றுவிட்ட சித்திரமே
கண்ணிரண்டு போதாது கற்பகமே
என் நெஞ்சில் வந்து நின்றுவிட்ட சித்திரமே

உன்னை பாடும் பதம் நாடி வர
பாதார விந்தம் தந்தாயே தாயே
கண்ணிரண்டு போதாது கற்பகமே
என் நெஞ்சில் வந்து நின்றுவிட்ட சித்திரமே

உயிரில் கலந்தவளே
உணர்வில் புகுந்தவளே
மயிலாப்பூர் மடமயிலே
ஓர் இரவும் பகலுமற்ற
வெளியைக் காட்டி என்னை
அருகே வா என்றவளே

பொட்டு வைத்து முத்தமிட்டுப்
போடா என்றாய்
பயிர் நட்டுவைத்தேன் எட்டுத் திக்கும்
நான் தான் என்றாய்
பொட்டு வைத்து முத்தமிட்டுப்
போடா என்றாய்
பயிர் நட்டுவைத்தேன் எட்டுத் திக்கும்
நான் தான் என்றாய்

இனி என்ன வந்து என்னை
என்ன தான் செய்யும்
அம்மா தாயே

கண்ணிரண்டு போதாது கற்பகமே
என் நெஞ்சில் வந்து நின்றுவிட்ட சித்திரமே

எண்ணம் அறிந்தவளே
எல்லாம் தெரிந்தவளே
வண்ணம் கொஞ்சும் அன்னக்கிளியே
பால் கிண்ணம் எடுத்து வந்து
உண்ணக் கொடுத்தவளே
மின்னல் மழை ஆனவளே

முத்து நகை கொட்டிவிட்டு
முன்னே நின்றாய்
ரத்தினங்கள் அள்ளிக்கொள்ளு
வாடா என்றாய்
முத்து நகை கொட்டிவிட்டு
முன்னே நின்றாய்
ரத்தினங்கள் அள்ளிக்கொள்ளு
வாடா என்றாய்

உன் உறவில் பிறவி அது
பறந்தோடிப் போச்சுதம்மா
தாயே தாயே

கண்ணிரண்டு போதாது கற்பகமே
என் நெஞ்சில் வந்து நின்றுவிட்ட சித்திரமே
உனைப் பாடும் பதம் நாடி வர
பாதார விந்தம் தந்தாயே தாயே
கண்ணிரண்டு போதாது கற்பகமே
என் நெஞ்சில் வந்து நின்றுவிட்ட சித்திரமே

Credits
Writer(s): Deva
Lyrics powered by www.musixmatch.com

Link