Gananathan

கணநாதன் வரவேற்கிறான்
தன் பதம் தூக்கி நடமாடுவான்
நர்த்தன கணநாதன் வரவேற்கிறான்
தன் பதம் தூக்கி நடமாடுவான்

கீழ் நுழைவாசல் வருவோர்கள்
வினைத் தீர அருள் சேர
கணநாதன் வரவேற்கிறான்
தன் பதம் தூக்கி நடமாடுவான்

உண்ணாமுலை அம்மை
அண்ணாமலைக் கோவில்
சிங்கார வேலவனைக்
கும்பிடுவோம்
உண்ணாமுலை அம்மை
அண்ணாமலைக் கோவில்
சிங்கார வேலவனைக்
கும்பிடுவோம்
தென்பழனி தண்டபாணி
தரிசனமே
தன் சிந்தையாலே
கோவில் கட்டும் வாயிலாரே

கணநாதன் வரவேற்கிறான்
தன் பதம் தூக்கி நடமாடுவான்

திருமுறை மண்டபத்தில்
உற்சவர்கள் அலங்காரம்
துவஜஸ்தம்பம் பலிபீடம்
வணங்கிடுவோம்
திருமுறை மண்டபத்தில்
உற்சவர்கள் அலங்காரம்
துவஜஸ்தம்பம் பலிபீடம்
வணங்கிடுவோம்
நந்தி தேவன் புகழ் பாடி
நலம் காண்போம்
ஞானசம்பந்தர் பூம்பாவை
சரணம் சொல்வோம்

கணநாதன் வரவேற்கிறான்
தன் பதம் தூக்கி நடமாடுவான்

புன்னை மரம் சுற்றி வந்து
அம்மையப்பரைக் காண்போம்
சனிபகவான் சன்னதியை
வலம் வருவோம்
புன்னை மரம் சுற்றி வந்து
அம்மையப்பரைக் காண்போம்
சனிபகவான் சன்னதியை
வலம் வருவோம்
நவக்கிரக வழிபாடு
நடத்திடுவோம்
சிவ சுந்தரேசர் ஜகதீசர்
துதித்திடுவோம்

கணநாதன் வரவேற்கிறான்
தன் பதம் தூக்கி நடமாடுவான்
கீழ் நுழைவாசல் வருவோர்கள்
வினைத் தீர அருள் சேர
கணநாதன் வரவேற்கிறான்



Credits
Writer(s): Deva, Karpagadasan
Lyrics powered by www.musixmatch.com

Link