Mayilappoorin

மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம்
நினைத்ததை தருவாள் கற்பகம்
மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம்
நினைத்ததை தருவாள் கற்பகம்

அவள் மலரடி தொழுபவர்
பெறுவது மங்களம்
அனுபவமான சத்தியம்
அவள் மலரடி தொழுபவர்
பெறுவது மங்களம்
அனுபவமான சத்தியம்

மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம்
நினைத்ததை தருவாள் கற்பகம்

பங்குனித் திங்கள் பன்னிரெண்டு நாட்கள்
எங்கும் காணாத் திருவிழா
பஞ்சமூர்த்திகள் பவளக்கால் விமான
வீதி உலாவரும் முதல் விழா
அன்று நள்ளிரவு அன்னை மயிலாய்
பூஜை செய்யும் திருவிழா
அடுத்த நாளில் மண்டகப் படிவிழா
மூன்றாம் நாள் நந்தி விழா

நான்காம் நாள் பல வாகனம்
ஐந்தாம் நாள் மக தரிசனம்
ஆறாம் நாள் சங்கு அபிஷேகம்
ஏழாம் நாள் ரத உற்சவம்
பின்பு எட்டாம் நாள் அறுபத்தி
மூவர்கள் நாயன்மார் திருவிழா

மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம்
நினைத்ததை தருவாள் கற்பகம்
மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம்
நினைத்ததை தருவாள் கற்பகம்

பிச்சை பாத்திரம் ஏந்திய சிவனை
மோகினி அழைப்பாள் ஒன்பதாம் நாள்
பத்தாம் நாள் இரவில் திருமண வைபவம்
கற்பகம் கபாலி ஐக்கியம்
ஊடலும் கூடலும் மாறி மாறி
ஆடல் காட்டும் உமை மனம்
பாவம் அடியார் சுந்தரமூர்த்தி
தூது சென்றால் சமரசம்

மக்கள் எல்லாம் மிக மகிழ்ந்திடும்
துக்கம் எல்லாம் அங்கு கலைந்திடும்
திக்கெட்டும் வெடி முழங்கிடும்
தெய்வங்கள் வரம் வழங்கிடும்
அந்த தேனான கண்காட்சி
மாறாது மறையாது வருகவே

மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம்
நினைத்ததை தருவாள் கற்பகம்
மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம்
நினைத்ததை தருவாள் கற்பகம்

அவள் மலரடி தொழுபவர்
பெறுவது மங்களம்
அனுபவமான சத்தியம்
அவள் மலரடி தொழுபவர்
பெறுவது மங்களம்
அனுபவமான சத்தியம்

மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம்
நினைத்ததை தருவாள் கற்பகம்
மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம்
நினைத்ததை தருவாள் கற்பகம்



Credits
Writer(s): Deva
Lyrics powered by www.musixmatch.com

Link