Ponnoonjal

பொன்னூஞ்சல் ஆட்டுவது ஸ்ரீதேவியோ?
புது வீணை மீட்டுவது கலைவாணியோ?

பொன்னூஞ்சல் ஆட்டுவது ஸ்ரீதேவியோ?
புது வீணை மீட்டுவது கலைவாணியோ?

மின்னல் கொடி பெண்ணாகி விளையாட வந்ததோ?
மின்னல் கொடி பெண்ணாகி விளையாட வந்ததோ?
கண்ணின் மணி கற்பகமே கலைமானே ஆடு
கண்ணின் மணி கற்பகமே கலைமானே ஆடு

பொன்னூஞ்சல் ஆட்டுவது ஸ்ரீதேவியோ?
புது வீணை மீட்டுவது கலைவாணியோ?

பச்சை மணி மரகதமே
பசுந்தோகை மயிலே
பழமுண்டு பாலுண்டம்மா

பச்சை மணி மரகதமே
பசுந்தோகை மயிலே
பழமுண்டு பாலுண்டம்மா

இச்சை கொண்டதென்னமா?
எது வேண்டும் சொல்வாய்
எல்லாமே உன்னது தான்

கஸ்தூரி சந்தனம்
வெற்றிலைத் தாம்பூலம்
வெண்கவரி வீசுகிறோம்
தூப தீபம் காட்டுகிறோம்

பொன்னூஞ்சல், பொன்னூஞ்சல் ஆட்டுவது ஸ்ரீதேவியோ?
புது வீணை மீட்டுவது கலைவாணியோ?

தேரோடும் வீதியிலே
திருக்குளத்தின் நடுவே
நீராழி மண்டபத்திலே

தேரோடும் வீதியிலே
திருக்குளத்தின் நடுவே
நீராழி மண்டபத்திலே

சீரோடும் சிறப்போடும்
சிம்மாசனம் அமர்ந்தே
பார் முழுதும் காப்பவளே

தெப்பத்தில் பவனி
சக்தி பவானி
கற்பகத்தை காண்கின்றோம்
பொற்பதங்கள் போற்றுகிறோம்

பொன்னூஞ்சல்
அம்மா, பொன்னூஞ்சல் ஆட்டுவது ஸ்ரீதேவியோ?
புது வீணை மீட்டுவது கலைவாணியோ?

மின்னல் கொடி பெண்ணாகி விளையாட வந்ததோ?
மின்னல் கொடி பெண்ணாகி விளையாட வந்ததோ?
கண்ணின் மணி கற்பகமே கலைமானே ஆடு

பொன்னூஞ்சல் ஆட்டுவது ஸ்ரீதேவியோ?
புது வீணை மீட்டுவது கலைவாணியோ?



Credits
Writer(s): Deva
Lyrics powered by www.musixmatch.com

Link