Summa Kidandha

சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு சோளம் போட்டு புட்டேன்
அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு கொத்த வாரதென்ன
சுத்தி திரிஞ்ச பூனக்குட்டிக்கு சோத்த போட்டு புட்டேன்
அது வெள்ளி பானையில் பால குடிக்க துள்ளி வாரதென்ன

ஆ ஹாஹா ஹா ஹா ஆஹா ஆ ஹாஹா ஆஆ
ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ ஹோ

சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு சோளம் போட்டு புட்டேன்
அது கொண்டைய ஆட்டி கொஞ்ச வந்தா குத்தம் சொல்வதென்ன
ம்ம் எட்டி போறதென்ன

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வெயிலும் அடிச்சு மழையும் பெஞ்சா
நரிக்கும் நரிக்கும் கல்யாணம்
எது அடிச்சு எது பெஞ்சா எனக்கும் உனக்கும் கல்யாணம்

பாக்கு கடிச்சு வெத்தல போட்டா
பச்ச நாக்கு செவக்குமா
எது கடிச்சு எது போட்டா
எனக்கும் உனக்கும் செவக்குமா

நெத்தி பொட்டுக்காரி நெருங்கி வா பக்கமா
சொட்ட வாலை மீனு சுலபத்தில் சிக்குமா
பசிக்குது கண்ணு பந்தி வச்சா குத்தமா
விரலில் எடுத்து குத்துவது தப்புமா

ஆ ஹா ஹா ஹா ஹா ஆஹா ஆ
ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ

சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு சோளம் போட்டு புட்டேன்
அது கொண்டைய ஆட்டி கொஞ்ச வந்தா
குத்தம் சொல்வதென்ன
கொத்த வாரதென்ன

கல்லில் சிலைய அடிச்சு முடிச்சா
கடைசி வேலை கண் திறப்பு
எது அடிச்சு எது முடிச்சா
எனக்கும் உனக்கும் கடை திறப்பு

உப்பில் உரசி மொளகா கடிச்சா
உதட்டில் ஏறும் விறு விறுப்பு
எத உரசி எத கடிச்சா
எனக்கும் உனக்கும் சுறு சுறுப்பு

கள்ளிப்பட்டி காள கயித்தையே அக்குதே
சேல கீழ பாத்தா சிலுப்பி தான் நிக்குது
வயசு பொண்ண கண்டா வளைச்சுத்தான் முட்டுது
குத்த வச்ச பொண்ணு தான் கொம்ப சீவி விட்டது

ஆ ஹா ஹா ஹா ஹா ஆஹா ஆ
ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ

சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு சோளம் போட்டு புட்டேன்
அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு கொத்த வாரதென்ன
சுத்தி திரிஞ்ச பூனைகுட்டிக்கு சோத்த போட்டு புட்டேன்
அது வெள்ளி பானையில் பால குடிக்க துள்ளி வாரதென்ன

ஆ ஹா ஹா ஹா ஹா ஆஹா ஆ
ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ

Credits
Writer(s): Vairamuthu, Vidhyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link