Poovanathil

பூவனத்தில் மரமுண்டு
மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு
பூப்பறிக்கப் போவோமா
பூமகளே பெண்ணே வா

அன்னை மடித்தாலாட்டிலே திண்ணைக்கதை நாம் கேட்டதும்
தந்தை மேலே ஏறிக்கொண்டு அம்பாரிகள் நாம் போனதும்
வெண்டைக்காயின் காம்பைக் கிள்ளி தங்கக்கம்மல் என்று சொல்லி
தங்கைக் காதில் மாட்டிவிட்டு ரசித்ததுவும்
மொட்டைமாடி வெண்ணிலவில் வட்டமாக நாமமர்ந்து
கூட்டாஞ்சோறு கையில் வாங்கி ருசித்ததுவும்
எங்கள் வீடுபோல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா . ஆஆஆ

(பூவனத்தில்)

காற்றில் மரம் ஆடக்கண்டு வீட்டில் சென்று ஒளிந்தோமன்று
பேய்கள் எல்லாம் பொய்கள் என்று தந்தை சொல்ல பயமேதின்று
பள்ளிவிட்டுப் பசியுடன் துள்ளித்துள்ளி வீடுவந்து
ஒன்றுமில்லை என்றவுடன் சண்டை போட்டதும்
காய்ச்சல் வந்து படுக்கையில் சொந்தம் எல்லாம் துடிக்கையில்
அடிக்கடி காய்ச்சல் வரவேண்டிக்கொண்டதும்
எங்கள் வீடு போல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா . ஆஆஆ

(பூவனத்தில்)



Credits
Writer(s): Vidhyasagar, Muthukumar Na
Lyrics powered by www.musixmatch.com

Link