Naatham En Jeevanae

தானம்-தம்த-தானம்-தம்த-தானம்
தம்த-தானம்

பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஓலையில் வேறென்ன சேதி
தேவனே நான் உந்தன் பாதி
இந்த பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்

நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பால் ஊறுதே-ஓ
பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பால் ஊறுதே-ஓ
பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே

அமுத கானம் நீ தரும் நேரம்
நதிகள் ஜதிகள் பாடுமே
விலகி போனால் எனது சலங்கை
விதவை ஆகி போகுமே
கண்களில் மௌனமோ கோயில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார் மீது பூவாகி விழவா
விழியாகி விடவா

நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பால் ஊறுதே-ஓ
பூவும் ஆளானதே

இசையை அருந்தும் சாதக பறவை
போல நானும் வாழ்கிறேன்
உறக்கம் இல்லை எனினும் கண்ணில்
கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெந்நீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பால் ஊறுதே-ஓ
பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link