Amma Azhage

அம்மா அழகே
உலகின் ஒளியே
அம்மா அழகே
உலகின் ஒளியே

என் சங்கீதம் உன் கீதமே
உனை நான் அழைத்தால்
விழியில் மழையே

அம்மா அழகே
உலகின் ஒளியே

ஆகாயம் என் பாட்டில் அசைகின்றது
என் சங்கீதம் பொய் என்று யார் சொன்னது
கனவுகளே வழிவிடுங்கள்
கலைமகளை வரவிடுங்கள்

மலரில் உறங்கும் பூங்காற்று
அதனை எழுப்பும் என் பாட்டு
ஓடும் நிலாவே ஓளி தீபம் ஏற்று

ராகமே உயிராகுமே
அது பெற்றுத் தரும்
முத்துச் சரம்

துன்பம் தரும் நல்வேதமும்
இன்பம் தரும் பொன்மந்திரம்
முந்தும் தீ எனை சுற்றிச் சுடுமே
எந்தன் இசை அதை எட்டிச் சுடுமே
இந்த வெப்பம் என்னை என்ன செய்யும்
சந்தனங்கள் பூசுமோ
உள்ளிருக்கும் ஜோதி ஒன்று உண்டு
அதனை வெப்பம் தீண்டுமோ

படபட படவென
எரிகிற கொழுந்து
இமைகளை உரசுது
இது ஒரு அழகு

வேதம் கெடாது
தீயில் விழாது
யாரும் தொடாத சுருதி
அங்கம் பொடிபட நெஞ்சம் உருகிட
தேவி வருவது உறுதி
தேவி வருவது உறுதி
தேவி வருவது உறுதி



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link