En Nesarin Anbile

என் நேசரின் அன்பிலே
ஆனந்தமாய் இருந்தேன்
அவர் வார்த்தையும் சித்தமும்
போதும் என்று உணர்ந்தேன்
வாழ்க்கையும் இனித்ததே
என் நாளெல்லாம் ஒளிர்ந்ததே
அவர் வார்த்தை ஒன்றே போதும்
என் வாழ்வே இன்பமாகும்

மனிதனைக் கண்டேன்
அவன் அழகைக் கண்டேன்
வார்த்தையைக் கண்டேன்
நான் தவறி விழுந்தேன்
உடைக்கப்பட்டேன் கதறினேன்
செய்வதறியாமல் வாடினேன்
செல்வம் கண்டேன்
பெயர்ப் புகழ் கண்டேன்
பாவம் கண்டேன்
அதில் தெரிந்தே விழுந்தேன்
கலங்கினேன் நான் புலம்பினேன்
ஆதரவின்றி நான் நொறுங்கினேன்

பாவ வாழ்க்கை வாழ்ந்தேன்
நிம்மதி இழந்தேனே

அந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
அன்பைத் தேடினேன்
தொலைந்துப் போன ஆட்டைப் போல்
சிதறுண்டு நான் ஓடினேன்

இயேசுவைக் கண்டேன்
அவர் அழுவதைக் கண்டேன்
என் பாவம் கண்டேன்
நான் தரையில் விழுந்தேன்
எனக்கான தண்டனை அவர் பெற்றார்
எனக்கான சிலுவையியை அவர் ஏற்றார்
இயேசுவைப் போல்
நான் வாழ்ந்திடுவேன்
அவருக்காய்
நான் எதையும் இழப்பேன்
பாவம் செய்வதை விட சாவதே மேல்
உண்மையில் உத்தமனாய் வாழ்ந்திடுவேன்

இயேசுவைப் போல யாரையும்
இந்த உலகில் கண்டதில்லை

எந்தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்
இயேசு போதுமே
வாழ்ந்தாலும் நான் மரித்தாலும்
இயேசுவையே நான் சார்ந்திடுவேன்

என் நேசரின் அன்பிலே
ஆனந்தமாய் இருப்பேன்
அவர் வார்த்தையும் சித்தமும்
போதும் என்று உணர்ந்தேன்
அவர் சிந்தின இரத்தத்திற்க்
இணையில்லை
அவர் காட்டிடும் அன்பிற்கு
அளவில்லை

அவர் பார்வை ஒன்றே போதும்
என் பாவம் எல்லாம் கரையும்

எந்தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்
இயேசு போதுமே
வாழ்ந்தாலும் நான் மரித்தாலும்
இயேசுவையே நான் சார்ந்திடுவேன்

Written By: Bernard Praveen Kumar [Praveen BNT]



Credits
Writer(s): Praveen Kumar S
Lyrics powered by www.musixmatch.com

Link