Yesu Uyirthare (Resurrection Song)

கொண்டாடுவோம் ஆர்ப்பரித்திடுவோம்
நம் இயேசு உயிர்த்தாரே
தம் அன்பினை அவர் காட்டிடவே
தம் ஜீவன் தந்தாரே

இயேசு உயிர்த்தாரே
நம் இயேசு உயிர்த்தாரே
தூய ஆவியால் நிறைத்தாரே
புது வாழ்வு தந்தாரே

கொண்டாடுவோம் ஆர்ப்பரித்திடுவோம்
நம் இயேசு உயிர்த்தாரே
தம் அன்பினை அவர் காட்டிடவே
தம் ஜீவன் தந்தாரே

நம் மீறுதலுக்காய் அவர் காயப்பட்டார்
நம் அக்கிரமத்திற்க்காய் அவர் நொறுக்கப்பட்டார்
நம்மை மீட்கவே
தண்டனை அவர் ஏற்றாரே
நமக்காய் சிலுவையில் மரித்தார்
பாவம் போக்கினாரே
பயம் அதை நீக்கினாரே

இயேசு உயிர்த்தாரே
நம் இயேசு உயிர்த்தாரே
தூய ஆவியால் நிறைத்தாரே
புது வாழ்வு தந்தாரே

நாமே அவர் சாட்சிகள்
ஒன்றாய் சேர்ந்து செல்லுவோம்
இயேசுவின் அன்பினை
இந்த உலகிற்கு நாம் காட்டுவோம்
என்றென்றும் அவர் ஆட்சி செய்வார்
இயேசு ராஜாதி ராஜாவே
அவர் நாமத்தை உயர்திடுவோம்

இயேசு உயிர்த்தாரே
நம் இயேசு உயிர்த்தாரே
தூய ஆவியால் நிறைத்தாரே
புது வாழ்வு தந்தாரே

கொண்டாடுவோம் ஆர்ப்பரித்திடுவோம்
நம் இயேசு உயிர்த்தாரே
தம் அன்பினை அவர் காட்டிடவே
தம் ஜீவன் தந்தாரே

இயேசு உயிர்த்தாரே
நம் இயேசு உயிர்த்தாரே
தூய ஆவியால் நிறைத்தாரே
புது வாழ்வு தந்தாரே

கொண்டாடுவோம் ஆர்ப்பரித்திடுவோம்
நம் இயேசு உயிர்த்தாரே
தம் அன்பினை அவர் காட்டிடவே
தம் ஜீவன் தந்தாரே

Written By: Bernard Praveen Kumar [Praveen BNT]



Credits
Writer(s): Praveen Kumar S
Lyrics powered by www.musixmatch.com

Link