Nam Christhu Pirandhare (Christmas Song)

பிறந்தார் பாலன் இயேசு
மரியின் மகனாக
தேவனின் அன்பைக் காட்டிட
மண்ணிற்கு வந்தாரே
நிலவின் ஒளியினிலே
குளிரின் நடுவினிலே
இழந்த வாழ்வை மீண்டும் தந்திட
மண்ணகம் வந்தாரே

வானதூதர்கள் பாட
விண்ணகம் மகிழுந்ததே
குழந்தையின் சத்தம் கேட்டு
மீட்பின் வழியும் பிறந்ததே

ராஜாதி ராஜாவாம் இயேசு
அவர் கர்த்தாதி கர்த்தரே
எளிமையின் தோற்றம் ஏற்று
ஏழைக் குடிலில் பிறந்தாரே
நம் கிறிஸ்து பிறந்தாரே
நம் ஆண்டவர் பிறந்தாரே

பிறந்தார் பாலன் இயேசு
மரியின் மகனாக
தேவனின் அன்பைக் காட்டிட
மண்ணிற்கு வந்தாரே

மேய்ப்பர் கூட்டத்தினர்க்கு
நற்செய்தி வந்ததே
ராஜாவின் விண்மீனைக் கண்டு
ஞானிகள் தேடிவந்தனரே

இயேசுவைக் கண்ட நேரம்
அங்கே ஆனந்தம் பிறந்ததே
தூபமும் தங்கமும் போலமும்
அவர் பாதம் வைத்தனரே
அவரைத் தொழுது வணங்கினரே
இயேசு அனைத்தையும் ஏற்றாரே

ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசு கிறிஸ்து பிறந்தாரே
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசு கிறிஸ்து பிறந்தாரே

பிறந்தார் பாலன் இயேசு
மரியின் மகனாக
தேவனின் அன்பைக் காட்டிட
மண்ணிற்கு வந்தாரே
காலம் வந்ததே
மீட்பும் உதித்ததே
நம்மை மீட்க மனிதனாய் வந்தவர்க்கு
உள்ளத்தைத் தருவாயோ...?

Written By Bernard Praveen Kumar [Praveen BNT]



Credits
Writer(s): Praveen Kumar S
Lyrics powered by www.musixmatch.com

Link